ஓடேசா துறைமுகத்தில் வணிக கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் மாயம்
ஓடேசா துறைமுகத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் காணாமல் போயுள்ளனர்.
சரக்கு கப்பல் மீது தாக்குதல்
உக்ரைனின் ஓடேசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜூலை 25ம் திகதி எம்.வி அக்ன் ராக்நார்(MV AGN Ragnar) என்ற வணிக கப்பல் தாக்கப்பட்டதாக கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
Point of Contact, Embassy of India, Ukraine
— India in Ukraine (@IndiainUkraine) July 26, 2026
cons.kyiv@mea.gov.in
cons1.kyiv@mea.gov.in
Our Emergency contact no. - +380933559958 Mr. Aji Kumar, SS ( Consular) @MEAIndia pic.twitter.com/2XolkORrcu
அந்த கப்பலில் 4 இந்தியர்கள் இருந்த நிலையில் தாக்குதலை அடுத்து 2 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மேலும் 2 மாலுமிகள் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.
இந்நிலையில் மாயமான 2 இந்திய மாலுமிகளையும் கண்டுபிடிக்க உள்ளூர் அதிகாரிகளுடன் 24 மணி நேரமும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் யாருக்கும் உதவி தேவைப்பட்டால் அழைக்குமாறு உதவி எண்களையும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்த தாக்குதல்
ஓடேசாவில் ஜூலை 19ம் திகதி நடந்த தாக்குதலில் எம்.வி கோல்டன் லியோ என்ற கப்பல் தாக்கப்பட்டது.

இதில் இருந்த 17 பணியாளர்களில் 5 பேர் இந்தியர்கள். இதில் துரதிர்ஷ்டவசமாக 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்கள் உறுதியாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |