அமெரிக்காவில் H-1B விசா மோசடி: 2 இந்திய வம்சாவளியினரின் மோசமான செயல்
H-1B விசா மோசடி குற்றச்சாட்டை கலிபோர்னியாவை சேர்ந்த 2 இந்திய வம்சாவளி நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
H-1B விசா மோசடி
கலிபோர்னியாவின் டப்ளின் நகரை சேர்ந்த 2 இந்திய வம்சாவளி நபர்கள் அமெரிக்காவின் H-1B வேலை விசாவை பல ஆண்டுகளாக தவறாக பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பத் ராஜிடி(Sampath Rajidi) மற்றும் ஸ்ரீதர் மாடா(Sreedhar Mada) என்ற 51 வயது மதிக்கத்தக்க இரண்டு இந்திய வம்சாவளியினர் இந்த H-1B விசா மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

S-Team Software Inc மற்றும் Uptrend Technologies LLC ஆகிய இரு விசா சேவை நிறுவனங்களை நடத்தி வரும் சம்பத் ராஜிடி மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் UCANR பிரிவில் CIO ஆக பணியாற்றி வரும் ஶ்ரீதர் மாடா இருவரும் தங்கள் மீதான விசா மோசடி குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளனர்.
2020 முதல் 2023 வரை இவர்கள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி H-1B விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஶ்ரீதர் மாடாவிற்கு நேரடி பணி நியமனத்திற்கு அதிகாரம் இல்லை என்றாலும், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்லூரியில் பணிபுரிய இருப்பதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து விசா ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் விசா கிடைத்தவுடன், அந்த பணியாளர்களை அந்த கல்லூரியில் பணியமர்த்தாமல் அவர்களுடைய மற்ற நிறுவனங்களில் பணியமர்த்தி லாபம் பார்த்து வந்துள்ளனர்.

H-1B விசா வாய்ப்பானது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், இவர்களின் இந்த மோசடி செயலால் H-1B விசாவிற்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் தங்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர்.
மேலும் இவர்கள் விசா ஒப்புதல் பெறுவதற்காக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளிடம் போலியான விவரங்களை வழங்கி இருப்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |