ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்: குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு
ஜேர்மனியில் இன்று பயங்கரமான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தையும், ஒரு பெரியவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 11.45 மணியளவில் நடந்ததாக BILD உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்த இடத்திலேயே பொலிஸார் ஒருவரை கைது செய்தனர்.
இதுவரை வேறு யாரும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் தாக்குதலின் காரணம் குறித்து பொலிஸார் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, அஷாபன்பர்க் நகரத்தின் மக்கள் மேலும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நகரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்துவந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
knife attack in Germany, knife attack in Aschaffenburg, Bavaria, Germany