நடுங்கும் குளிரில் அதிகாலை 2 மணிக்கு சாலையோரம் நின்றிருந்த கார்... பொலிசார் கண்ட மோசமான காட்சி
பிரித்தானியாவில், அதிகாலை 2 மணிக்கு -3 டிகிரி நடுங்கவைக்கும் குளிருக்கு நடுவில், சாலையோரம் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதைக் கவனித்த பொலிசார் அதை சோதனையிடுவதற்காக சென்றுள்ளனர்.
Yelverton என்ற கிராமத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரை நெருங்கிய பொலிசார், அந்த காருக்குள் இரண்டு இளம்பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.
Plymouth என்ற இடத்தில் அமைந்துள்ள தங்கள் வீடுகளிலிருந்து 10 மைல் தூரம் பயணித்து Yelverton என்ற இடத்துக்கு அந்த பெண்கள் வந்துள்ளதை தெரிந்துகொண்டுள்ள பொலிசார், அவர்கள் வெவ்வேறு வீடுகளில் வசிப்பவர்கள் என்பதையும் விசாரித்து அறிந்துகொண்டுள்ளனர்.
இருவரையும் கடுமையாக எச்சரித்த பொலிசார், தத்தம் வீடுகளுக்கு திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர்.
அத்துடன், வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த அவர்கள் ஓரிடத்தில் கூடி பொதுமுடக்க விதிகளை மீறியதால், அவர்களுக்கு 200 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட உள்ளது.


