பாலியின் புனித குரங்கு காட்டில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த சோகம்: சிசிடிவி காட்சிகள்
இந்தோனேசியாவின் பாலியில் உள்ள புனித குரங்கு காட்டில் மரம் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாலியில் விபத்து
பாலியின் பிரபலமான புனித குரங்கு காட்டில் பெரிய மரம் ஒன்று விழுந்து இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து கடந்த திங்கட்கிழமை, டிசம்பர் 10 ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி பிற்பகலில் நிகழ்ந்துள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த F. Justine Christine மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த Kim Hyoeun ஆகியோர் பலியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிசிடிவி காட்சிகள்
மரம் விழுந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அப்போது சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் ஓடிச்சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
பாலி பிராந்திய காவல்துறை உள்ளிட்ட உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் Ubud Kenak Medika மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புனித குரங்கு காட்டு சரணாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயரமான உயிரிழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
மேலும் விரிவான விசாரணை நடத்தவும், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சரணாலயம் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |