ஜேர்மனியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைது: தப்பியோட வைத்த 2 மூகமுடி நபர்கள்
2 Masked man violently free prisoner in Essen While he was out on medical visit: ஜேர்மனியில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதியை இரண்டு மர்ம நபர்கள் தப்பிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைதியை தப்பிக்க வைத்த இரண்டு மர்ம நபர்கள்
ஜேர்மனியின் எசென்(Essan) நகரில் 2 மூகமுடி அணிந்த மர்ம நபர்கள் சிறை அதிகாரிகளை தாக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியை தப்பியோட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எசென் நகரின் கென்னடிப்ளாட்ஸ்(Kennedyplatz) பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையின் வரவேற்பு அறையில் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணியளவில் இந்த துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மர்ம நபர்களால் விடுவிக்கப்பட்ட கைது 32 வயதுடைய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார். பொதுமக்கள் யாரும் அவரை அருகில் அணுக வேண்டாம் என்றும், அவர்கள் ஆயுதங்கள் ஏந்தி இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேடுதல் வேட்டை தீவிரம்
சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு விடுவிக்கப்பட்ட கைதி உடன் மூகமுடி அணிந்த மர்ம நபர்கள் இருவரும் மின்சார ஸ்கூட்டர்களில்(E-scooters) வெவ்வேறு திசைகளில் தப்பியோடியதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க ஜேர்மன் பொலிஸார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிறை அதிகாரியின் உடல்நிலை குறித்த எந்தவொரு தகவலையும் பொலிஸார் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.