ஈரானுக்கு உளவு பார்த்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: உறுதிப்படுத்திய
CENTCOM US Army Destroys Iran Spy vessel in Gulf of Oman: ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவத்தினர் ஈரானின் உளவு கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஈரானுக்கு உளவு பார்த்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்
ஓமன் வளைகுடாவில் ஈரானிய ஆதரவு படகு ஒன்று அமெரிக்க கடற்படை கப்பல்களை உளவு பார்த்ததாக கூறி, அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்க மத்திய கட்டளைக் குழு அண்மையில் அழித்துள்ளது.
உலகின் முக்கிய நீர்வழிப் பாதைக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியில் ஈரானிய படைகளை களமிறங்க இருப்பதாக அறிவித்த அடுத்த நாளே இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
On Oct. 6, U.S. forces destroyed an Iranian-affiliated dhow conducting surveillance and targeting U.S. Navy ships in the Gulf of Oman. Over the past seven months, Iran's Islamic Revolutionary Guard Corps has continued to indiscriminately target thousands of civilian mariners transiting regional waters in addition to U.S. Navy warships. Crew members were safely removed prior to destruction of the dhow. Repatriation efforts are ongoing.
— U.S. Central Command (@CENTCOM) October 14, 2026
X தளத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க மத்திய கட்டளைக் குழு(CENTCOM), அமெரிக்க கடற்படை கப்பலுக்கு எதிராக உளவு பார்த்த ஈரானின் ஆதரவு கப்பல் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு அதன் மீது சரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த சம்பவமானது மத்திய கிழக்கின் முக்கிய கடல் வழி போக்குவரத்தில் நீடிக்கும் தொடர் ஸ்திரமற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது.
பணியாளர்கள் வெளியேற்றம்
[1VVT6L
அமெரிக்க கடற்படை சம்பந்தப்பட்ட படகை அழிப்பதற்கு முன்னதாக அதிலிருந்த பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேறிய அனைத்து பணியாளர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் தூதரக பணிகளில் CENTCOM பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.