உக்ரைனிய ட்ரோன்களின் வேக கட்டுப்பாட்டிற்கு அமெரிக்கா தான் காரணம்: எலான் மஸ்க் கருத்து
Musk Points out US Govt may be behind Slowdown Ukraine Drones: உக்ரைனிய ட்ரோன்களின் வேக கட்டுப்பாட்டிற்கு அமெரிக்கா அரசு காரணமாக இருக்கலாம் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
குறைந்த இணைய சேவையின் வேகமும், ஜெலென்ஸ்கியின் அறிக்கையும்
உக்ரைன் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க்(Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையின் பாதுகாப்பு பிரிவான ஸ்டார்ஷீல்ட்(Starshield) அமைப்பை பயன்படுத்தி வருகிறது.
இவை உக்ரைனிய ட்ரோன்கள் துல்லியமாக இலக்கை அடைவதற்கும், ட்ரோன்களின் தடையற்ற தொடர்புக்கும் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில் புதிதாக அமுல்படுத்தப்பட்ட விதிகள் படி, இணைய சேவையின் உச்ச வரம்பு மணிக்கு 100 மைல்(160 கி.மீ) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் வெளியிட்ட அறிக்கையில், எதிர்பாராத வேக கட்டுப்பாடு காரணமாக தங்களது ட்ரோன்கள் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இது தொடர்பாக வெளியிட்ட கருத்தில், இணைய துண்டிப்பு ஒருவேளை எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
எலான் மஸ்க்கின் பதில்
இந்நிலையில் ஜெலென்ஸ்கி உட்பட பல தலைவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஸ்டார்ஷீல்ட் இணைய அமைப்பானது முழுக்க முழுக்க அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ளது. இதன் வேகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் அமெரிக்க ராணுவத்திற்கும், இறுதியாக அமெரிக்க ஜனாதிபதிக்குமே இருப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்டார்லிங்க் இணைய சேவை என்பது சேவை தற்காப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உரியது. இவற்றை நேரடியாக தாக்குதல்களுக்கு பயன்படுத்துவது பொருத்தமான ஒன்றாக இருக்காது என்று எலான் மஸ்க் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் இந்த திடீர் இணைய வேக குறைப்பு என்பது தொழில்நுட்ப கோளாறு இல்லை என்றும், அமெரிக்கா-கீவ் இடையே ஏற்பட்டுள்ள தூதரக உறவு சிக்கலின் எதிரொலியாக இருக்கலாம் என்றும் உக்ரைனிய ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.