வில்லியம் – கேட் தம்பதியின் அன்மர் ஹால் இல்லத்தில் திருட முயற்சி: 2 ஆண்கள் கைது
2 men arrested for burglary at William and Kate's Norfolk home: பிரித்தானிய இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோருக்குச் சொந்தமான நோர்போக் (Norfolk) நாட்டுப்புற இல்லமான அன்மர் ஹாலில் (Anmer Hall) திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வில்லியம் – கேட் தம்பதியின் அன்மர் ஹால் இல்லத்தில் திருட முயற்சி
திங்கட்கிழமை மாலை 6 மணிக்குச் சற்று முன்பு, அன்மர் ஹால் இல்லத்தை சுற்றி சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
நோர்போக் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் (Sandringham Estate) பகுதியில் விரிவான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வளாகம் முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இரண்டு பேர் கைது
சோதனையின் இறுதியில் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்து திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 2 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தின் போது இளவரசர் வில்லியம், இளவரசி கேட், அவர்களின் பிள்ளைகளான ஜார்ஜ், சார்லோட், லூயிஸ் ஆகிய 5 பேரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.