ரஷ்யாவுடனான எல்லையை மூடுவது குறித்து ஆலோசிக்கும் ஐரோப்பிய நாடு
Latvia discussing to close border with russia: ரஷ்யாவுடனான தனது தரைவழி எல்லையை மூடுவதற்கு லாட்வியா ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான லாட்வியா அண்டை நாடான ரஷ்யாவுடனான எல்லையை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யா சதித்திட்டம்
உள்ளூர் ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு எதிராக ரஷ்யா சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, அண்டை நாடான எஸ்டோனியா, ரஷ்ய எல்லையில் உள்ள தனது சோதனைச் சாவடிகளை மூடத் தயாராகி வருகிறது.
ஆனால், எஸ்டோனியாவின் சதித் திட்டக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது. அத்துடன் மாஸ்கோவில் உள்ள எஸ்டோனியாவின் உயர்மட்டத் தூதரை வரவழைத்து, திட்டமிடப்பட்ட இந்த எல்லை மூடலுக்கு எதிர்ப்பு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

லாட்வியா அரசாங்கம்
இந்த நிலையில், லாட்வியா அரசாங்கம் ரஷ்யாவுடனான தனது தரைவழி எல்லையை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பால்டிக் செய்தி நிறுவனமான டெல்ஃபி செய்தி வெளியிட்டுள்ளது.
லாட்வியாவின் பிரதமர் ஆண்ட்ரிஸ் குல்பர்க்ஸ், தேசிய பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பால்டிக் நாடுகள் முழுவதும், போக்குவரத்து மற்றும் பயணத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களின் அடிப்படையில், சாத்தியமான கட்டுப்பாடுகள் குறித்து ஒரு தெளிவான நிலைப்பாட்டைத் தயாரிக்குமாறு, வெளியுறவு மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
உள்துறை அமைச்சர் ஜானிஸ் டோம்ப்ராவா, "புதிய அரசாங்கம் சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது; வரும் நாட்களில் இதை செய்து முடிப்போம் என்று நம்புகிறேன்" என்று கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
