தெருக்களில் பெண் சிங்கம் நடமாட்டம்: வெளிநாடொன்றில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Turkish authorities launch search for lioness spotted roaming Istanbul outskirts: துருக்கி நாட்டில், தெருக்களில் பெண் சிங்கம் ஒன்று நடமாடுவது தெரியவந்ததைத் தொடர்ந்து அதைப் பிடிக்கும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
துருக்கி நாட்டில், தெருக்களில் பெண் சிங்கம் ஒன்று நடமாடுவது தெரியவந்ததைத் தொடர்ந்து, அது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெருக்களில் சிங்கம் நடமாட்டம்
ஞாயிற்றுக்கிழமை மாலை, துருக்கியிலுள்ள இஸ்தான்புல் நகருக்கு அருகில் பெண் சிங்கம் ஒன்று நடமாடுவது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அது தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், CCTV காட்சிகள் அடிப்படையில் தங்களுக்குக் கிடைத்த தகவல் உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, தேசிய பூங்கா அலுவலர்கள், கால்நடை சிறப்பு நிபுணர்களுடன் இணைந்து அதிகாரிகள் அந்த சிங்கத்தைத் தேடிவருகிறார்கள்.
இந்நிலையில், இப்படி ஒரு சிங்கம் நடமாடுவது மற்றும் அதைப் பிடிக்க அதிகாரிகள் துவங்கியுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.