புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்ட கட்சியில் முக்கிய பொறுப்பில் புலம்பெயர் பின்னணி கொண்ட இருவர்
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சியில், புலம்பெயர்தல் பின்னணி கொண்ட இருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
One-man band
நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சியைப் பொருத்தவரை, அவர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார். வேறு யாரையும் மற்ற நாட்டு மக்களுக்கு அதிகம் தெரியாது.

அதனால், அவரது கட்சி மீது ‘one-man band’ என்ற விமர்சனம் கூட வைக்கப்பட்டுள்ளது.
அதை மாற்றும் வகையில், தான் ஒரு முன்னணி குழுவை உருவாக்கியுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார் ஃபராஜ்.
அந்தக் குழுவில், ஸியா யூசுஃப், ராபர்ட் ஜென்ரிக், ரிச்சர்ட் டைஸ் மற்றும் சுவெல்லா பிரேவர்மேன் ஆகியோர் உள்ளனர்.

இதில், ராபர்ட் ஜென்ரிக்கும், சுவெல்லா பிரேவர்மேனும் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்தவர்கள். தற்போது அவர்கள் யூகே ரீஃபார்ம் கட்சியில் இணைந்துள்ளார்கள்.
சுவெல்லாவோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பிரித்தானியாவின் உள்துறைச் செயலராகவே இருந்தவர்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், யூகே ரீஃபார்ம் கட்சி கடுமையான புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி ஆகும்.

நைஜல் ஃபராஜ், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மட்டுமின்றி, சட்டப்படி புலம்பெயர்ந்தோருக்கும் எதிரான கருத்துக்கள் கொண்டவர்.
ஆனால், அவரது கட்சியின் முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள சுவெல்லா ப்ரேவர்மேனும், கட்சியில் ஏற்கனவே முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஸியா யூசுஃபும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்!
சுவெல்லாவின் பெற்றோர் இந்திய வம்சாவளியினர், ஸியாவின் பெற்றோர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |