5 ஆண்டுகளாக மாயமான இரண்டு மகள்கள்! 32 வயது தாயாரின் வீட்டு பின்பகுதியில் பொலிசார் கண்ட அதிர்ச்சி காட்சி
அமெரிக்காவில் 32 வயது பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் இரண்டு மகள்கள் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.
அதிலும் கடந்த 2016 மற்றும் 2017ல் இருவரும் புதைக்கப்பட்ட நிலையில் தற்போது தான் அது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், மேரி சூ சிண்டர் (32) என்ற பெண்ணை குழந்தைகளின் நலனுக்கு ஆபத்து மற்றும் சிறார்களை துன்புறுத்தல் செய்த வழக்கின் கீழ் கைது செய்துள்ளோம்.
இதோடு அவரின் கணவர் எக்கோ பட்லர் (26)ஐயும் பிடித்துள்ளோம். இந்த வழக்கில் எக்கோவின் தாயார் மிச்செலையும் கைது செய்திருக்கிறோம்.
கடந்த மாதம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை முதலில் தொடங்கியது. அதன்படி மேரின் 7 வயது மகன் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்த நிலையில் அது தொடர்பான புகாரில் அவர் வீட்டுக்கு சென்றோம். அப்போது வீட்டில் இருந்தே மகன் படிப்பதாக மேரி சொன்னார், அவரின் பேச்சு நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
இதையடுத்து அவரின் இரண்டு மகள்களான நிகோல் எலிசபெத் (6) ஜாஸ்மின் (4) குறித்து கேட்டதற்கு சரியான பதில் சொல்லவில்லை, அவர்கள் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக மாயமானது தெரியவந்தது.
பின்னர் அவர் வீட்டு பின்பக்கத்தில் பார்த்த போது இருவரும் புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தோம்.
தகவலின்படி நிகோல் 2016லும், ஜாஸ்மின் 2017லும் புதைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இறந்த விதம், நோக்கம் மற்றும் அது தொடர்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மேரியின் மகனுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை, அவன் நலமாக உள்ளான் என தெரிவித்துள்ளனர்.