துருக்கியில் 5-வது நிலநடுக்கம்: பேரழிவில் பறிபோன 5000-க்கும் மேற்பட்ட உயிர்கள்
துருக்கியில் இன்று (செவ்வாய்கிழமை) மேலும் 2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது உயிர் பிழைத்த மக்களிடையயே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய நிலநடுக்கம்
துருக்கியில் இன்று 5.6 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் இரண்டு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
திங்களன்று 7.8, 7.6 மற்றும் 6.0 ரிக்டர் அளவிலான மூன்று பயங்கர நிலநடுக்கங்கள் துருக்கி மற்றும் சிரியாவில் பாரிய எண்ணிக்கையிலான இறப்புகளையும் படுகாயங்களையும் ஏற்படுத்தியது.
இப்பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Getty Images
மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவது மீட்புப் பணியாளர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது.
இந்தியா உட்பட பல நாடுகள், தொடர் நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் உதவி செய்ய முன்வந்துள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.