இண்டிகோவின் ஆதிக்கத்திற்கு செக் - இந்தியாவில் புதிதாக 3 விமான நிறுவனங்கள்
இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் புதிதாக 3 விமான நிறுவனங்கள் செயல்பாட்டை தொடங்க உள்ளது.
இண்டிகோவால் முடங்கிய விமான சேவை
இந்தியாவின் உள்நாட்டு விமான சந்தையில், இண்டிகோ(indigo) மற்றும் ஏர் இந்தியா குழுமம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இண்டிகோ மட்டும் 65 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 9 உள்நாட்டு விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், மத்திய அரசின் FDTL விதிகளைத் தொடர்ந்து, இண்டிகோ பல விமானங்களை ரத்து செய்தது. இதனால் இந்தியாவின் விமான சேவையில் கடுமையான பாதிப்பை ஏற்பட்டது.
3 புதிய விமான நிறுவனங்கள்
இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான இணைப்பை அதிகரிக்கவும், போட்டியை அதிகரிக்கும் வகையில் புதிதாக 2 நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ்(NOC) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டிலே, உத்தரபிரதேசத்தை தளமாகக் கொண்ட ஷங்க் ஏர்(Shankh Air) நிறுவனத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அல் ஹிந்த் ஏர்(Al Hind Air) மற்றும் ஃப்ளைஎக்ஸ்பிரஸ்(Fly Express) ஆகிய 2 விமான நிறுவனங்களும், தடையில்லா சான்றிதழை பெற்றுள்ளது.
இந்த 3 புதிய விமான நிறுவனங்களும், 2026 ஆம் ஆண்டில் செயல்பாட்டை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில்,அல் ஹிந்த் ஏர், கேரளாவை தளமாகக் கொண்ட அல்ஹிந்த் குழுமத்தால் இயக்கப்படுகிறது.
ஃப்ளைஎக்ஸ்பிரஸ் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கொரியர் மற்றும் சரக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் காரணமாக, உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமானச் சந்தைகளில் ஒன்றான இந்திய விமானப் போக்குவரத்தில் அதிக விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது.
Over the last one week, pleased to have met teams from new airlines aspiring to take wings in Indian skies—Shankh Air, Al Hind Air and FlyExpress.
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) December 23, 2025
While Shankh Air has already got the NOC from Ministry, Al Hind Air and FlyExpress have received their NOCs in this week.
It has… pic.twitter.com/oLWXqBfSFU
உதான் போன்ற திட்டங்கள் ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர், ஃப்ளை91 போன்ற சிறிய விமான நிறுவனங்கள் நாட்டிற்குள் பிராந்திய இணைப்பில் முக்கிய பங்கு வகிக்க உதவியுள்ளன" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |