15 விநாடிகளில் ரயிலாக மாறும் பேருந்து - எங்கே தெரியுமா?
இந்தியாவில், பொதுபோக்குவரத்திற்கு பேருந்து, ரயில், மெட்ரோ ஆகியவை பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் ஜப்பானில், பேருந்தையே தேவையான இடங்களில் ரயிலாகவும் பயன்படுத்துகின்றனர்.
ரயிலாக மாறும் பேருந்து
ஜப்பானின் சில நகரங்களில் பயணிகள் போக்குவரத்திற்காக இரட்டை முறை வாகனங்கள்(Dual Mode Vehicle) பயன்பாட்டில் உள்ளது.

இந்த பேருந்துகளில் இரட்டை சக்கரங்கள் உள்ளது. சாலைகளில் செல்லும் போது வழக்கமான ரப்பர் சக்கரத்தில் பேருந்து இயங்குகிறது.
தண்டவாளம் உள்ள பகுதிகளில், வாகனத்தின் உள்ளிருந்து எஃகு சக்கரங்கள் இறங்கி அதன் மூலம் ரயில் போல் இயங்குகிறது.

வெறும் 15 வினாடிகளில் பேருந்திலிருந்து, ரயிலாக மாறி விடுகிறது. இந்த வாகனத்தில் 21 பேர் வரை பயணிக்க முடியும்.
இந்த வாகனம் சாலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்திலும், தண்டவாளத்தில் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் பயணிக்கிறது.
ஜப்பானின் டோகுஷிமா மாகாணத்தில் உள்ள கையோ நகரில் 2021 ஆம் ஆண்டில் இந்த வாகனம் பொதுமக்களுக்கு அறிமுகமானது.
பயணிக்கும் தூரத்தை பொறுத்து, 200 யென் முதல் 800 யென் வரை (இந்திய மதிப்பில் ரூ.100 முதல் ரூ.450 வரை) பயணக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனமான ஆசா கோஸ்ட் ரயில்வே இந்த வாகனங்களை இயக்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |