பிரித்தானியாவில் இரண்டு புதிய கொசு இனங்கள் கண்டுபிடிப்பு: நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் நோய் பரப்பும் இரண்டு புதிய கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இரண்டு புதிய கொசு இனங்கள் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் இரண்டு புதிய கொசு இனங்கள் கண்டறியப்பட்டு இருப்பதோடு அவை வேகமாக பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என்று கருதப்படுகிறது.
கண்டறியப்பட்ட இரண்டு முக்கிய கொசு இனங்கள் முறையே, எகிப்தியன் கொசுக்கள் என்று அழைக்கப்படும் ஏடிஸ் ஏஜிப்தி(Aedes aegyptil) என்ற கொசுவும், ஆசிய புலி கொசு என்று அழைக்கப்படும் எடிஸ் அல்போபிக்டஸ்(Aedes albopictus) என்ற கொசுவும் உள்ளன.
இந்த கொசுக்கள் மூலம் மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா, ஸிக்கா மற்றும் டிரோஃபிலேரியாசிஸ் போன்ற நோய்கள் பரவுகின்றன.
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட இந்த எகிப்தியன் மற்றும் ஆசிய புலி கொசுக்கள் துணை வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |