தென்னாப்பிரிக்க அணியை புரட்டியெடுத்த இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஜோடி: இந்தியா அபார வெற்றி
தென்னாப்பிரிக்க அணியின் இலக்கை 45.5 ஓவர்களில் கடந்து இந்தியா அபார வெற்றி.
சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் JSCA இன்டர்நேஷனல் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்றது, இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
The duo of Iyer & Ishan take India home in 2nd ODI ?
— OneCricket (@OneCricketApp) October 9, 2022
Can't wait for the decider on Tuesday!!!#ShreyasIyer #CricketTwitter #IshanKishan #INDvsSA pic.twitter.com/myxc7rSXsd
முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் 5 ஓட்டங்களிலும், மாலன் 25 ஓட்டங்களிலும் வெளியேற ஒட்டங்கள் குவிப்பதில் தென்னாப்பிரிக்க அணி சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிக்ஸ் 74 ஓட்டங்களும் மற்றும் மார்க்ராம் 79 ஓட்டங்களும் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதனால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 278 ஓட்டங்கள் என்ற மதிக்கத்தக்க எண்ணிக்கையை குவித்தது.
இதனை தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 13 ஓட்டங்களிலும், சுப்மன் கில் 28 ஓட்டங்களிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
BCCI
ஆனால் மூன்றாவது விக்கெட்க்கு ஒன்றிணைந்த இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இஷான் கிஷான் 84 பந்துகளில் 93 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 113 ஓட்டங்களையும் அபாரமாக குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.
இறுதியில் இந்திய அணி 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை வெறும் 45.5 ஓவர்கள் முடிவிலேயே அடைந்து, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி இந்திய அணி பதிவு செய்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணிக்கு வலுவான ஆதரவாக இருந்த கென்ட் டியூக்: அரச குடும்பத்தில் பெறப்போகும் முக்கிய அந்தஸ்து
இந்த ஆட்டத்தில் சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.