ராணிக்கு வலுவான ஆதரவாக இருந்த கென்ட் டியூக்: அரச குடும்பத்தில் பெறப்போகும் முக்கிய அந்தஸ்து
ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து டியூக் ஆஃப் கென்ட் மூத்த உறுப்பினரானர்.
140க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகளுடன் இணைந்து ராயல் சேவை.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, தி டியூக் ஆஃப் கென்ட் அரச குடும்பத்தின் மிக வயதான மூத்த உறுப்பினரானார்.
பிரித்தானியாவை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் 96வது வயதில் உயிரிழந்ததை தொடர்ந்து, தி டியூக் ஆஃப் கென்ட் இளவரசர் எட்வர்ட் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார்.
GETTY
கென்ட்டின் டியூக் மற்றும் டச்சஸ் ஆகிய இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி மெரினாவுக்கு மகனாக அக்டோபர் 9, 1935ம் ஆண்டு லண்டனில் உள்ள பெல்கிரேவ் சதுக்கத்தில் இளவரசர் எட்வர்ட் பிறந்தார், இவர் கிங் ஜார்ஜ் மற்றும் ராணி மேரியின் பேரனும் ஆவார்.
ஆகஸ்ட் 25, 1942 ல் இரண்டாம் உலகப் போரின் போது ஸ்காட்லாந்தில் உள்ள கெய்த்னலில் RAF விமான விபத்தில் இளவரசர் எட்வர்ட் தந்தையான இளவரசர் ஜார்ஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, தந்தையின் டியூக் ஆஃப் கென்ட், ஏர்ல் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூஸ் மற்றும் பரோன் டவுன்பேட்ரிக் ஆகிய பட்டங்களை இளவரசர் எட்வர்ட் தொடர்ந்து பெற்றார்.
PA
16வது வயதில் அரசு பணிகளுக்கான உத்தியோகபூர்வ நிச்சயதார்த்தங்களில் கலந்து கொள்ளத் தொடங்கிய இளவரசர் எட்வர்ட், ராயல் நேஷனல் லைஃப் போர்ட் நிறுவனம், ஸ்ட்ரோக் அசோசியேஷன் மற்றும் காமன்வெல்த் போர் கிரேவ்ஸ் கமிஷன் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இன்று 87 வது வயது பிறந்த நாளை கொண்டாடும் இளவரசர் எட்வர்ட், ஆட்சி காலம் முழுவதும் ராணிக்கு மிகவும் ஆதரவாக செயல்பட்டார்.
GETTY
டியூக் ஆஃப் கென்ட் 140க்கும் மேற்பட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகளுடன் போரில் இறந்தவர்களை நினைவுகூருவது, பிரித்தானிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியை வளர்ப்பது வரை பலவிதமான பிரச்சினைகளில் ஒத்துழைப்பு வழங்கி வந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: கேட் மிடில்டனின் கடுமையான வீட்டுத் தடை: இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் அமைதி
டியூக்கின் மிகவும் பிரபலமான சங்கங்களில் ஒன்றான ஃப்ரீ மேசன்ஸ் அமைப்பை 1963ல் தொடங்கினார், மேலும் ரகசிய அமைப்பின் முக்கிய பகுதியாகவும் நீண்ட காலமாக இளவரசர் எட்வர்ட் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.