இரவோடு இரவாக திருப்பியடித்த புடின்... முக்கிய பாலம் தகர்ப்புக்கு உக்கிரமாக பழி தீர்த்த ரஷ்யா
இரவோடு இரவாக விளாடிமிர் புடின் திருப்பியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் தொடர்பில் குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இது பேய்த்தனமானது என்றார்.
உக்ரைனின் Zaporizhzhia பகுதியில் குடியிருப்பு வளாகங்கள் மீது ரஷ்ய துருப்புகள் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
குறித்த தாக்குதலில் சிக்கி 17 கொல்லப்பட்டுள்ளதாகவும், டசின் கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி புதைந்து போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@Reuters
கிரிமியாவில் இருந்து ரஷ்யாவை இணைக்கும் முக்கிய பாலம் நேற்று தகர்க்கப்பட்ட நிலையில், இரவோடு இரவாக விளாடிமிர் புடின் திருப்பியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Zaporizhzhia சிட்டி கவுன்சில் செயலாளர் ஒருவர் தெரிவிக்கையில், இரவோடு இரவாக ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதில் 17 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
@afp
குறைந்தது 5 குடியிருப்புகள் மொத்தமாக சேதமடைந்துள்ளது எனவும், 50க்கும் மேற்பட்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் ராணுவத்தினரும் ரஷ்யாவின் திடீர் தாக்குதலை உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி டசின் கணக்கான மக்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பில் குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இது பேய்த்தனமானது என்றார்.
@AFP
அமைதியை விரும்பும் மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விளாடிமிர் புடினின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அடுத்த நாள் 3.2 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான முக்கிய பாலம் ஒன்று தாக்குதலுக்கு இலக்கானது.
குறித்த பாலமானது உக்ரைனின் விவாதத்துக்குரிய பகுதியான கிரிமியாவில் இருந்து ரஷ்யாவை இணைக்கும் அதி முக்கிய பாலமாகும். இதுவரை குறித்த பாலத்தை தாக்கியது யார் என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.