சுட்டுக் கொல்லப்பட்ட 2 பொலிஸ் அதிகாரிகள்: அவுஸ்திரேலியாவில் தப்பியோடிய நபருக்கு வலைவீச்சு!
அவுஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளியை புடிக்க காவல்துறையினர் தீவிர தேடல் வேட்டையை முன்னெடுத்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகருக்கு வடகிழக்கே 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள போர்பன்கா என்ற சிறிய நகரத்தில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்து இருப்பதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கர ஆயுதங்கள் ஏந்திய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட பகுதியில் சிறப்பு படை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பான கைது ஆணையை வழங்க பத்து அதிகாரிகள் கொண்ட குழு போர்பன்கா கிராமத்தில் ஒரு வீட்டை அணுகிய போது, பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல் படி, துப்பாக்கி சூடு நடத்திய நபர் டேசி ப்ரீமேன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி விட்டு, உடனடியாக வீட்டிற்கு அருகிலுள்ள புதர்களுக்குள் புகுந்து தப்பியோடியதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் காவல்துறை இதுவரை சம்பந்தப்பட்ட நபரின் பெயரை உறுதிப்படுத்தவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |