அடையாளம் தெரியாத ஏவுகணைகள் தாக்குதல்: ஓமன் கடலில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் சேதம்
2 oil tankers Struck by Unidentified missiles near Oman: ஓமன் கடற்கரைக்கு அருகே இரண்டு எண்ணெய் டேங்கர் மீது அடையாளம் தெரியாத ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்
ஹார்முஸ் நீரிணையில் இருந்து வெளியேறிய வணிக எண்ணெய் கப்பலின் எஞ்சின் அறையின் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று நேரடியாக தாக்கியது.
ஓமனின் நாட்டின் Khasab துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 17 கடல் மைல் தூரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இருப்பதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் முகமை(UKMTO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
UKMTO WARNING 216-26 - ATTACK Click here to view the full product⤵️ https://t.co/4BDc31A5gS #MaritimeSecurity #MarSec https://t.co/EvR3a0Cm7a
— UKMTO Operations Centre (@UK_MTO) November 21, 2026
இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக கப்பல் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த தாக்குதலுக்கு முன்னதாக வடக்கே 11 கடல் மைல் தூரத்தில் மற்றொரு எண்ணெய் கப்பல் மீது இதே போன்று அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தி இருப்பதாக UKMTO தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.