பிரித்தானியாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சோகம்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு
2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் உயிரிழப்பு
உலகின் மிகப்பெரிய அரை மாரத்தான் போட்டியாக கருதப்படும் கிரேட் நார்த் ரன்(Great North Run) போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூகேஸில்(Newcastle) முதல் சவுத் ஷீல்ட்ஸ்(South Shields) வரை நடைபெற்ற 13.1 மைல் தூரப் அரை மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் வடகிழக்கு பகுதியை நேர்ந்த இரண்டு 25 வயது இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.

அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக கிரேட் ரன் கம்பெனி அறிவித்துள்ளது.
உயிரிழப்புக்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற இந்த அரை மாரத்தான் போட்டியில் கிட்டத்தட்ட 63,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த ஓட்டப் பந்தயத்தில் மற்றொரு முக்கியமான நிகழ்வாக, இதில் பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ஹாம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையை அவர் ஆண்டி பர்ஹாம் பெற்றுள்ளார்.