விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ
விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
பிரிக்ஸ் உச்சி மாநாடு
இந்திய தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13ம் திகதிகளில் 18 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.
13 உலகத் தலைவர்களும், 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை உருவாக்குதல் ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருந்தது.
இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டின் பட்டத்து இளவரசராக ஷேக் காலித் பங்கேற்றார்.
உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி முறைப்படி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அபுதாபி இளவரசரின் வியப்பூட்டிய செயல்
இந்நிலையில் மாநாட்டை முடித்து விட்டு தன்னுடைய நாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பட்டத்து இளவரசர் ஷேக் காலித், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.
ஆனால் விமானத்தில் இருந்து திடீரென காரை நோக்கி திரும்பிய பட்டத்து இளவரசர் ஷேக் காலித், தனக்கான காரை ஓட்டி வந்த இந்திய ஓட்டுநரை நோக்கி நடந்து சென்றார்.
Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan
— Siddhant Mishra (@siddhantvm) September 13, 2026
of #AbuDhabi, Upon departing #India and before boarding the plane, turns around and goes to bid farewell to the Indian driver who was with him pic.twitter.com/oj5Fs6DRJ1
அத்துடன் அந்த ஓட்டுநருடன் கை குலுக்கி விட்டு சில வார்த்தைகளைப் பேசிவிட்டு சென்ற மீண்டும் தன்னுடைய விமானத்தில் ஏறிச் சென்றார்.
இதையடுத்து அபுதாபி இளவரசரின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓட்டுநரை அங்கீகரிப்பதற்காக நேரம் ஒதுக்கிய அபுதாபி இளவரசரின் செயலை பாராட்டி வருகின்றனர்.