இலங்கையில் போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை காவலாளி: இருவரை கைது செய்த பொலிஸார்
கொழும்புவில் போதைப் பொருளுடன் இருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போதைப் பொருளுடன் இருவர் கைது
கொழும்பு கோமாகமை பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது “ஐஸ்” போதைப் பொருட்களுடன் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 31 மற்றும் 34 வயதுடைய கடுவெலை மற்றும் கெஸ்பாவை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விசாரணையின் போது போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 34 வயது நபர் பாடசாலை ஒன்றின் காவலாளி என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இருவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், இருவரும் நீண்ட காலமாக இந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனரா என்பது குறித்தும் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |