லண்டன் விமான நிலையத்தில் மோதிக்கொண்ட 2 விமானங்கள்., இறக்கைகள் சேதம்
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் () பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு ஸ்டாண்டில் இருந்து விர்ஜின் அட்லாண்டிக்கின் காலியான போயிங் 787-9 ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டபோது சம்பவம் நிகழ்ந்தது.
காலியாக இருந்த விர்ஜின் அட்லாண்டிக் (Virgin Atlantic) விமானத்தின் இறக்கை முனை பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானத்துடன் மோதியது.
இதில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் லேசாக சேதமடைந்தன.
பயணிகளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், விமான நிலையத்தின் செயல்பாடுகளில் எந்த ஒரு தாக்கத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றும் ஹீத்ரோ விமான நிலையம் கூறியுள்ளது.
சிறு சேதமடைந்த விமானத்தை தங்கள் பொறியியல் குழு மதிப்பிட்டு வருவதாகவும், மேலும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மாற்று விமானத்தை வழங்கியதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
London Heathrow Airport, Virgin Atlantic, British Airways