துப்பாக்கி முனையில் 25 பள்ளி மாணவிகள் கடத்தல்: மர்ம கும்பலிடம் இருந்து தப்பிய இருவர்
நைஜீரியாவில் பள்ளி மாணவியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவியர்கள் கடத்தல்
நைஜீரியாவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பலால் 25 மாணவியர்கள் வரை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு மாணவியர் தங்கும் விடுதியில் இருந்து கிட்டத்தட்ட 25 மாணவியர் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த அத்துமீறல் சம்பவத்தின் போது பள்ளியின் துணை அதிபர் ஹசன் யாகுயு மாகுகு கொல்லப்பட்டதுடன், மேலும் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தப்பி வந்த இரண்டு மாணவியர்கள்
இந்நிலையில் கடத்தல் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே ஆயுதமேந்திய கும்பலிடம் இருந்து தப்பி மாணவி ஒருவர் அன்று மாலையே அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அத்துடன் ஆரம்ப கடத்தல் பட்டியலில் இல்லாத மற்றொரு மாணவியும், தாக்குதலுக்கு பிறகு அதிகாலையிலேயே தப்பியோடி விட்டதாக பள்ளி அதிபர் மூஸா ரபி மகாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இரண்டு மாணவியர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
களமிறங்கிய பாதுகாப்புப் படையினர்
இதற்கிடையில் கடத்தப்பட்ட மாணவியர்களை பத்திரமாக கண்டுபிடித்து விடுவிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தங்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |