சீனாவில் இரண்டு 13 வயது சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட நீண்ட கால சிறை தண்டனை: முழு பின்னணி
சீனாவில் வகுப்பு தோழரை கொடூரமாக கொலை செய்த இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு தோழரை கொன்ற சிறுவர்கள்
வடக்கு சீனாவில் உள்ள நீதிமன்றம், தங்கள் வகுப்பு தோழரை கொடூரமாக கொலை செய்த இரண்டு இளைஞர்களுக்கு கடுமையான சிறை தண்டனைகளை விதித்துள்ளது.
13 வயதான வாங்(Wang) என்ற சிறுவனை அவரது 3 வகுப்பு தோழர்கள் இணைந்து கொலை செய்த வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வயது இந்த குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் விதித்துள்ள நீண்ட கால சிறை தண்டனை குறித்து நாடு முழுவதும் விரிவான விவாதம் எழுந்துள்ளது.
13 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை
கடந்த மார்ச் மாதம் சம்பவம் நடைபெற்ற போது 13 வயதில் இருந்த மூன்று சந்தேக நபர்களும் அதே வயதில் இருந்த வாங்(Wang) என்ற சிறுவனை கைவிடப்பட்ட பசுமை இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை நீண்ட நேரம் துன்புறுத்திய பின்னர், இறுதியாக இரும்பு ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததோடு, வாங்கின் உடலை ஒரு ஆழமற்ற குழியில் புதைத்துள்ளனர்.
விதிக்கப்பட்ட சிறை தண்டனை
இந்த வழக்கை விசாரித்த ஹெபேய் (Hebei) மாகாணத்தின் ஹந்தான்(Handan) நகர நீதிமன்றம், முக்கியமான இரு சந்தேக நபர்களான சாங்(Zhang) மற்றும் லி(Li) ஆகியோரை கொலை குற்றத்திற்கு குற்றவாளிகளாக அறிவித்தது.
அத்துடன் சாங்-க்கு(Zhang) ஆயுள் தண்டனையும், அதே சமயம் லி-க்கு(Li) 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மேலும், மூன்றாவது சந்தேக நபரான மா-வுக்கு(Ma) சீன சட்டத்தின்படி "சிறப்பு திருத்தக் கல்வி" தண்டனை விதிக்கப்பட்டது. அதே சமயம் இந்த கொலையை நீதிமன்றம் “கொடூரமானது" மற்றும் "மிகவும் வெறுக்கத்தக்கது" என்று வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |