நடுக்கடலுக்கு கொண்டு வரப்பட்ட 2 Ton AC.., மோடி தியானத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்யப்படும் நிலையில் 2 Ton AC கொண்டுவரப்பட்டுள்ளது.
3 நாள்கள் மோடி தியானம்
மக்களவை தேர்தல் முடியும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 தேர்தலில் இமயமலையில் கேதார்நாத் குகையில் தியானம் செய்தார். அங்கு, இடுப்பில் காவித்துண்டு, தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி என மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.
அதேபோல தான் தற்போதும் தியானம் மேற்கொள்கிறார். அவர் தியானம் செய்யவுள்ள 45 மணிநேரமும் இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வாராம்.
ஏற்பாடுகள் தீவிரம்
இந்நிலையில், மோடி தியானம் செய்யவுள்ள விவேகானந்தர் நினைவு மண்டப அறையில் ஏசி வைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதற்காக, நேற்று காலை சுமார் 2 டன் ஏ.சி கொண்டு வரப்பட்டு தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், 3 ஸ்டார் ஹொட்டலுக்கு இணையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதோடு, 2,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |