பிரித்தானியாவில் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த 14 வயது சிறுவர்கள்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 வயது சிறுவர்கள் கைது
பிரித்தானியாவில் ஹாம்ப்ஷயரின்(Hampshire) ஃபோர்டிங்பிரிட்ஜ்(Fordingbridge) பகுதியை சேர்ந்த இரு 14 வயது சிறுவர்கள், ஜனவரி 17 ஆம் திகதி மாலை நகர விளையாட்டு மைதானத்தில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் மீது பெண்ணை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் பிற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இரண்டு சிறுவர்களில் ஒருவன் பெண்ணை துஷ்பிரயோகம் செய்தல், கொலை மிரட்டல், பொது இடத்தில் கத்தி வைத்திருத்தல் மற்றும் பாலியல் குற்றம் புரியும் நோக்கத்துடன் ஒருவரைக் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இரண்டாவது சிறுவன் பெண்ணை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
ஜாமீனில் விடுவிப்பு
பொலிஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் ரோம்சியைச்(Romsey) சேர்ந்த 13 வயதுடைய மூன்றாவது சிறுவன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜனவரி 17 ஆம் திகதி மாலை முன்பே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் அதிகாரிகள் இரவு 10:41 மணிக்கு சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். இரு குற்றவாளிகளும் சவுத்தாம்ப்டன் யூத் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |