வெளிநாடு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
வெளிநாடு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணொருவர் உட்பட இரண்டு பெண்கள், யானை ஒன்றால் கொல்லப்பட்டார்கள்.
இரண்டு பெண்களுக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானியரான Easton Janet Taylor (68) மற்றும் நியூசிலாந்து நாட்டவரான Alison Jean Taylor (67) ஆகிய இருவரும் from New Zealand ஜாம்பியா நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.
நேற்று அவர்கள் South Luangwa National Park என்னும் வனவிலங்குப் பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, குட்டியுடன் நின்ற பெண் யானை ஒன்று அவர்களை திடீரென தாக்கியுள்ளது.
பூங்கா பாதுகாவலர்கள் அந்த யானையை துப்பாக்கியால் சுட்டும் அது அந்தப் பெண்களைத் தாக்குவதை நிறுத்தவில்லையாம்.
அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார்கள்.
பொதுவாகவே, குட்டியுடன் இருக்கும் பெண் யானைகள், தங்கள் குட்டிகளுக்கு ஆபத்து நேரிடலாம் என கருதும்போது இதுபோல் பயங்கரமாக தாக்குவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |