அம்மாவை சுட்டுக்கொன்ற 2 வயது மகன்: அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் அவசர உதவியை அழைத்ததைத் தொடர்ந்து பொலிசார் அவரது வீட்டுக்கு விரைந்தனர்.
அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண், தனக்கு நடந்ததை விவரமாக கூற, அதை பதிவு செய்துகொண்ட பொலிசார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
நடந்தது என்ன?
அமெரிக்காவின் Ohio மாகாணத்திலுள்ள Norwalk என்னுமிடத்தில், தன் கணவர் மற்றும் இரண்டு வயது மகனுடன் வாழ்ந்துவந்துள்ளார் லாரா (Laura Ilg, 31).
லாராவின் கணவர் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார்.
சென்ற வாரம், வெள்ளிக்கிழமையன்று, லாராவின் கணவர் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில், லாரா துணி துவைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
தம்பதியர் வீட்டின் படுக்கையறையில் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒரு துப்பாக்கி வைக்கப்பட்டிருக்குமாம். அந்த துப்பாக்கியை எப்படியோ எடுத்துள்ளான் லாராவின் மகன்.
அப்போது தவறுதலாக அவன் கை பட்டு அந்த துப்பாக்கி வெடித்ததாக லாரா கூறியுள்ளார்.
தாயும் குழந்தையும் மரணம்
லாராவின் முதுகில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவசர அவசரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்த குழந்தையை எடுத்துள்ளார்கள் மருத்துவர்கள். லாரா, அப்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
ஆனால், லாராவின் வயிற்றிலிருந்த அந்த ஆண் குழந்தை பிழைக்கவில்லை. சில மணி நேரங்களுக்குப் பின் லாராவும் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், லாரா வீட்டை சோதித்த பொலிசார், அங்கு சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்கள்.
அப்படி இருந்தும் லாராவின் மகன் அந்த துப்பாக்கியை எடுத்தது எப்படி, அவனால் எப்படி துப்பாக்கியின் ட்ரிகரை இழுக்க முடிந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |