15 மணி நேரம் குழந்தைகளை காருக்குள் விட்டுச் சென்ற தாய்: இறுதியில் நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் காருக்குள் இருந்த இரண்டு வயது மகளை தாய் மறந்துவிட்டு சென்ற நிலையில், காரில் அதிகரித்த வெப்பம் காரணமாக அந்த குழந்தை உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை மறந்த தாய்
அமெரிக்காவின் புளோரிடாவில் தாய் ஒருவர் தன்னுடைய 2 வயது பெண் குழந்தையை காரிலேயே மறந்து விட்டு சென்ற பிறகு, கிட்டத்தட்ட 15 மணி நேரம் காரில் 41.6 செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து குழந்தையின் பெற்றோர் கேத்ரீன் ஆடம்ஸ் மற்றும் கிறிஸ்டோபர் மெக்லீன் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Holmes County Sheriff's Office
அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்து அவர்களது 4 வயது குழந்தை உயிர் தப்பியுள்ளது, அத்துடன் தற்போது அந்த குழந்தை புளோரிடாவின் குழந்தை பாதுகாப்பு சேவைகளின் பராமரிப்பில் உள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் விடுத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவசர சிகிச்சை குழுவினர், குழந்தைக்கு தேவையான அனைத்து முதலுதவி சிகிச்சைகளும் வழங்கினர், இருப்பினும் அந்த குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Holmes County Sheriff's Office
பொலிஸார் அறிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஹோம்ஸ் கவுண்டி ஷெரீப் ஜான் டேட், குழந்தையை காரிலேயே மறந்து விட்டு சென்றதை அவரது தாயார் ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அவர்களது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் மெத்தம்பேட்டமைன்(methamphetamine) மற்றும் மரிஜுவானா(marijuana) ஆகிய போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Holmes County Sheriff's Office
நான் உறுதியாக நம்புவது என்வென்றால், இந்த துயர சம்பவத்திற்கு பின்னால் இந்த போதைப் பொருட்கள் இருக்கலாம் என்பதையே என்று கவுண்டி ஷெரீப் ஜான் டேட் குறிப்பிட்டுள்ளார்.