சுவிட்சர்லாந்தில் முதியவரை ஏமாற்றிய இரண்டு இளம்பெண்கள்
சுவிஸ் மாகாணமொன்றில், பொலிஸ் எனக்கூறி முதியவர் ஒருவரை ஏமாற்றிய இளம்பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
முதியவரை ஏமாற்றிய இளம்பெண்கள்
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Martigny என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் 85 வயது முதியவர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
தொலைபேசியில் பேசிய பெண், தான் அவரது வங்கியிலிருந்து அழைப்பதாகவும், அவரது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய அவரது ஆவணங்கள் தேவை என்றும் கூறியுள்ளார்.
அந்த ஆவணங்களை சேகரிப்பதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த முதியவரின் வீட்டுக்கே வருவார் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
அதேபோல, சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து அந்த முதியவரின் வங்கி அட்டைகள் முதலான சில ஆவணங்களைப் பெற்றுச் சென்றுள்ளார்.
பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த முதியவர் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் முறையே 21 மற்றும் 25 வயதுடைய அந்தப் பெண்கள் இருவரையும் கைது செய்துள்ளார்கள்.
அந்த முதியவரிடமிருந்து ஏமாற்றிப் பெறப்பட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அந்தப் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |