தேர்வு முடித்து திரும்பிய 20 மாணவர்கள் உயிரிழப்பு, 100 பேர் மாயம்
காங்கோ படகு விபத்த்தில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ படகு விபத்து
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் படகு விபத்து நிகழ்வது தொடர்கதையாக உள்ளது.

நேற்று முன்தினம், கசாய் மாகாணத்தில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று, சங்கூரு மற்றும் கசாய் ஆறுகள் சங்கமிக்கும் பகுதிக்குள் நுழையும் வேளையில் நீரில் மூழ்கியுள்ளது.
இந்த படகில் அரசு தேர்வுகளை முடித்துவிட்டு சென்ற மாணவர்கள் பயணித்து வந்த நிலையில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள் 80 பேரை அங்கிருந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் படகில் 200 பேருக்கு மேல் பயணித்ததாக கூறும் நிலையில், மீதமுள்ள 100 பேரின் நிலை என்ன என கேள்வி எழுந்துள்ளது.
விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிச்செல்வது, மோசமான பாதுகாப்பு தரநிலை, இரவுநேர பயணம் ஆகியவையே அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கு காரணமாக கருதப்படுகிறது.
"காங்கோ ஜனநாயகக் குடியரசின் படகு உரிமையாளர்கள் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர், மனித உயிர்களைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. உயிர் இழப்பை தடுக்க கடுமையான பாதுகாப்பு விதிகளை அமுல்படுத்த வேண்டும் " என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |