52 வயது பேராசிரியரை காதல் திருமணம் செய்த 20 வயது மாணவி! இணையத்தில் வைரலாகும் பேட்டி
52 வயதில் 20 வயது மாணவியை திருமணம் செய்த பேராசிரியர்
பேராசிரியரின் தோற்றமும், ஆளுமையும் தன்னை கவர்ந்ததாக கூறிய மாணவி
பாகிஸ்தானில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாஜித் அலி (52). அதே கல்லூரியில் பி.காம் படித்து வரும் மாணவி ஜோயா (20).
சாஜித் அலி மீது காதல் கொண்ட ஜோயா அவரிடம் தனது அதனை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் முதலில் மறுப்பு தெரிவித்த சாஜித், பின்னர் மாணவியின் காதலை ஏற்றுக் கொண்டார்.
இருவருக்கும் 32 வயது வித்தியாசம் இருப்பதால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளும் முடிவை இவர்களது உறவினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், சாஜித்தின் தோற்றம் மற்றும் ஆளுமை தனக்கு பிடித்திருக்கிறது என்று கூறிய ஜோயா, அவருடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இருவரும் ஒன்றாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில் தங்கள் காதல் கதை குறித்து இருவரும் பல விடயங்களை கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதனைப் பார்த்தவர்கள் வயது வித்தியாசத்தை கூறி இது தவறு என்றும், சிலர் தம்பதிக்கு வாழ்த்துக்கள் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.