400 குடிமக்கள்; தனி பாஸ்போர்ட் - 20 வயதில் தனிநாட்டை உருவாக்கிய நபர்
20 வயதான இளைஞர் ஒருவர் 125 ஏக்கரில் தனி நாட்டை உருவாக்கியுள்ளார்.
20 வயதில் தனி நாடு
குரேஷியா(Croatia) மற்றும் செர்பியாவிற்கு(Serbia) இடையேயான எல்லைப்பகுதியில், டானூப் நதியின் அருகே உரிமைகோரப்படாத 125 ஏக்கர் காட்டுப்பகுதி உள்ளது.
இதனை, அவுஸ்திரேலிய வம்சாவளியான பிரித்தானியாவை சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன்(Daniel Jackson ) என்பவர் தனி நாடாக உருவாக்கியுள்ளார்.
'வெர்ட்டிஸ் சுதந்திர குடியரசு' ( Republic of Verdis) என்ற பெயரில் நாடு உருவாக்கும் எண்ணம் 14 வயதிலே அவருக்கு சில நண்பர்களுடன் இணைந்து தோன்றியது.
18 வயதான போது, வெர்ட்டிஸ்க்கு தனி கொடி மற்றும் சில சட்டங்களை உருவாக்கியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, 2019 மே 31 அன்று வெர்ட்டிஸ் சுதந்திரம் பெறுவதாக ஜாக்சன் அறிவித்தார். தற்போது வெர்ட்டிஸ்க்கு அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கம் உள்ளது.
400 குடிமக்கள்
வெர்டிஸின் அதிகாரபூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் ஆகிய மொழிகள் உள்ளன. யூரோவை தனது அதிகாரபூர்வ நாணயமாக பயன்படுத்துகிறது.
அக்டோபர் 2023 ஆம் ஆண்டு டேனியல் ஜாக்சனை நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கூறி அவரை குரோஷிய காவல்துறை நாடு கடத்தியது. மேலும், அங்கு நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
குரோஷியவின் ஓஜெசிக் நகரில் இருந்து படகு மூலம் மட்டும் இந்த நாட்டை அடைய முடியும்.
15,000 பேர் இந்த நாட்டின் குடியுரிமை பெற விண்ணப்பித்திருந்த நிலையில், 400 பேர் தற்போது அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு பாஸ்போர்ட் வாழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த பாஸ்போர்ட்டை சர்வதேச நாடுகளுக்கு செல்ல பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறைவான நபர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கினாலும், மருத்துவம் மற்றும் காவல்துறை போன்ற பணிகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த நாடு, தற்போது வாடிகனுக்கு அடுத்தபடியாக உலகின் 2வது சிறிய நாடாக உள்ளது.
தற்போது நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தி வரும் டேனியல் ஜாக்சன், விரைவில் வெர்ட்டிஸ்க்கு செல்லும் அனுமதி கிடைக்கும் என நம்புகிறார். மேலும், அங்கு அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. சாதாரணமான குடிமகனாகவே இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |