பிரித்தானியாவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்! ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம்
பிரித்தானியாவின் லண்டன் பூங்காவில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண்
வடக்கு லண்டனின் இஸ்லிங்டனில் உள்ள பூங்கா ஒன்றில், 20 வயது பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ சேவைகள், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குறித்த பெண்ணுக்கு துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்தனர். ஆனால், அவரது நிலை இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில் பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், 'இது ஆரம்ப கட்டத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடரும் வரை உள்ளூர் பகுதியில் அதிகாரிகள் அதிகரிக்கப்படுவர்' என்று உறுதியளித்தனர்.
முன்னதாக, டான்காஸ்டரில் இருந்து லண்டனுக்கு செல்லும் LNER ரயிலில் 11 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |