ஒரே ஆண்டில் ரூ.367 கோடிக்கு சம்பாதித்த 20 வயது இளம்பெண்! சமூக ஊடகம் தேடித் தந்த வெற்றி
அமெரிக்காவை சேர்ந்த சோஃபி ரெயின் என்ற 20 வயது இளம்பெண் OnlyFans என்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தி ஒரே ஆண்டில் ரூ.367 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளார்.
கோடீஸ்வரியான 20 வயது இளம்பெண்!
இன்றைய இணைய உலகில், யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பலரும் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சோஃபி ரெயின், கடந்த ஓராண்டில் மட்டும் OnlyFans என்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தி ரூ.367 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளார்.
அதாவது இது ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சோஃபி, 17 வயதிலேயே உணவகத்தில் வேலை சேர்ந்த நிலையில், பின்னர் 2022 ஏப்ரலில் OnlyFans என்ற சமூக வலைதளத்தில் தனது வீடியோக்களை பதிவிட தொடங்கினார்.
கோடிகளில் கொட்டிய வருமானம்
சில நாட்களிலேயே அவரது ஆபாசம் கலந்த வீடியோக்கள் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனால் ஓராண்டு காலத்தில், சோஃபி ரெயின் 11 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றதோடு பல கோடிகளையும் அள்ளியுள்ளார்.
சோஃபி ரெயினுக்கு இன்ஸ்டாகிராமில் 5.2 மில்லியன் பின் தொடர்பாளர்கள், X பக்கத்தில் 2.5 மில்லியனுக்கு அதிகமான பின்தொடர்பாளர்களும் உள்ளனர்.
தனது வருமானத்தில் பெரும்பகுதியை முதலீடு செய்துள்ள சோஃபி, தற்போது பல ஆடம்பர பொருட்களையும் வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |