ஹமாவிற்குள் நுழைந்த சிரிய கிளர்ச்சியாளர்கள்: எதிர்ப்பின்றி 60 கிலோ மீட்டர் முன்னேற்றம்!
ரஷ்ய படைகள் மற்றும் சிரிய ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு சிரிய கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
முன்னேறும் சிரிய கிளர்ச்சியாளர்
தாக்குதலை தொடங்கிய 3 நாட்களிலேயே ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படை அலெப்போ நகருக்குள் நுழைந்து பெரும்பாலான பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனை சிரிய ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், சிரிய கிளர்ச்சியாளர்களிடம் முழுமையான கட்டுப்பாட்டை வழங்க விடாமல் ரஷ்யா மற்றும் சிரிய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் தொடங்கி வருகின்றனர்.
Victory in Aleppo.
— Thomas van Linge (@ThomasVLinge) November 30, 2024
After 12 years, the impossible happened.#Syria pic.twitter.com/O3aZjYNPvP
இந்நிலையில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆட்சி கவிழ்ப்பு பதற்றம்
இதனால் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பை குறைத்துள்ள நிலையில், ஜனாதிபதி அசாத்திற்கு சார்பான ஊடகங்கள் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான பதற்றத்தை புகாரளித்து வருகின்றனர்.
Syrian media report gunfire in the capital city of Damascus
— NEXTA (@nexta_tv) November 30, 2024
Local television has reduced broadcasting, and pro-Assad media outlets are reporting a possible attempted coup.
Additionally, forces of Hayat Tahrir al-Sham have entered Hama, advancing approximately 60 kilometers… pic.twitter.com/aVz2zZ7KRJ
சிரிய ராணுவம் தொடர்ந்து பின்வாங்கி வருதால் சிரிய கிளர்ச்சியாளர்கள் படைகள் ஹமாவிற்குள் நுழைந்து இருப்பதுடன் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் முன்னேறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |