கொதிக்கும் ரசத்தில் விழுந்த 20 வயது இளைஞர் பலி! திருமண மண்டபத்தில் நிகழ்ந்த சோகம்
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளைஞர் ஒருவர் கொதிக்கும் ரச பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் பணியில் ஈடுபட்ட மாணவர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 23ஆம் திகதி, திருமண மண்டபத்தில் சமையல் வேலை நடந்துள்ளது. அப்போது 20 வயது இளைஞர் ஒருவர் அங்கு சமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறிப்போய் இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Image for representation
சிகிச்சை பலனின்றி
உயிரிழந்த மாணவர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த இளைஞரின் பெயர் சதீஷ் (20) என்பதும், அவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.
பகுதி நேரமாக கேட்டரிங் சர்வீஸ் பணிக்கு வந்தபோது தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Image for representation (Photo: File)