கடந்த 20 ஆண்டுகளில் பெற்ற பட்டங்கள் செல்லாது! புதிய குண்டை போட்ட தாலிபான்கள்.. அச்சத்தில் இளைஞர்கள்
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பெற்ற பட்டங்கள் செல்லாது என்று தாலிபான்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
ஆண்கள் தாடியை குறைக்க கூடாது என்றும் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல கூடாது என்று அதிரடி உத்தரவுகளை பயங்கரவாதிகள் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் 2000 முதல் 2020ஆம் ஆண்டு வரை தாலிபான்கள் ஆட்சியில் இல்லை.
எனவே அந்த வேளையில் பள்ளிகளிலும், உயர்கல்வி நிலையங்களில் படித்து பட்டம் பெற்றதில் எந்த பயனும் இல்லை என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து தாலிபான் அரசின் கல்வி அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, இன்று உள்ள முதுகலைப் படிப்புகள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளை விட மதிப்பு குறைவு.
இதனால் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து மாணவர்கள் பெற்ற பட்டங்கள் செல்லாது என்று தெரிவித்துள்ளனர்.