பிரித்தானியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடித்த மோதல்: 20 வயது இளைஞருக்கு கத்திக்குத்து
20 Years Old Stabbed Outside Birmingham Pub: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவில் வன்முறை
பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றின் அருகே நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த மோதல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் 20 இளைஞர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு செஸ்டர் சாலையில் அமைந்துள்ள பெக்கேர்ஸ் புஷ் என்ற கேளிக்கை விடுதியின் முன் இந்த வன்முறை சம்பவமானது அரங்கேறியுள்ளது.

தாக்குதலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் இளைஞர் உயிரை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணங்களை கண்டறிய வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை அடுத்து அந்த கேளிக்கை மதுபான விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.