ஓமன் கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: 2 இந்திய மாலுமிகளை காணவில்லை
2 Indian Marines Remains Missing in Coast of Oman: ஓமன் கடலில் வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது 2 இந்திய மாலுமிகள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிக கப்பல் மீது தாக்குதல்
ஓமன் கடல் பகுதியில் 11 இந்திய மாலுமிகளுடன் பயணித்த வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு ஓமனின் சோஹார் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிகராகுவா நாட்டு கொடி பறக்கவிடப்பட்ட MT Petro Dolphin என்ற எண்ணெய் தாங்கி வணிக கப்பல் மீது இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன்னதாக அந்த கப்பலில் 11 இந்திய மாலுமிகளை வரை இருந்த நிலையில், தாக்குதலுக்கு பிறகு 9 இந்திய மாலுமிகள் வரை மீட்பு குழுவினரால் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 2 இந்திய மாலுமிகளை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன 2 இந்திய மாலுமிகளையும் கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தன்னுடைய X தள பதிவில் உறுதியளித்துள்ளார்.
@Indemb_Muscat #TwoMore #IndianSeafarers Awaiting urgent status update on 2 missing Indian seafarers from MT Petro Dolphin. The Nicaragua-flagged tanker was hit by a drone attack on 11 Oct at Sohar Anchorage, Oman. 12 crew onboard 2 remain missing BirBahadur Yadav & Amit Singh . How many warnings from your side @CENTCOM ???? FSUI calls for immediate confirmation of their status, full support for families & protection of seafarers in the region. #SeafarersSafety #MTPetroDolphin @MEAIndia @shipmin_india @dgshipping_IN @DrSJaishankar @dgshipping_IN @FSUIINDIA @FsuiManoj
— FSUI (@FSUIINDIA) October 12, 2026
அதே நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழி பாதையில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களுக்கு இந்தியா பலத்த கண்டத்தை தெரிவித்துள்ளது.