200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்.., Demonetization பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய நபராக இருக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணமதிப்பிழப்பு (Demonetization) குறித்து பேசியது பேசுபொருளாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடு
கடந்த 2016 -ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த இந்திய அரசு, அதற்கு பதிலாக ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் விட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ரூ.2,000 நோட்டுகளையும் பணமதிப்பிழப்பு செய்தது.
இந்நிலையில் தான் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணமதிப்பிழப்பு (Demonetization) குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதியில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான வாங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு இது தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் பெரும் தொகையை சிலர் கொள்ளையடித்துள்ளனர். இதனால் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த சந்திரபாபு நாயுடு அவற்றிற்கு பதிலாக டிஜிட்டல் நோட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதன்பின்னர் தான் பணமதிப்பிழப்பு குறித்த விவாதம் மீண்டும் உருவெடுத்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய நபராக இருக்கும் சந்திரபாபு நாயுடு இந்த மாதிரியான கருத்துக்களை கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக இவர் கடந்த 2017 -ம் ஆண்டில் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |