மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்குக் கிடைத்த புதையல் பானை
செக் குடியரசில் மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகள் இருவருக்கு புதையல் பானைகள் கிடைத்துள்ளன.
சுற்றுலாப்பயணிகளுக்குக் கிடைத்த புதையல் பானை
செக் குடியரசில் மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகள் இருவர், சுவர் ஒன்றில் ஒரு பானை மறைந்திருப்பதைக் கண்டுள்ளனர்.
அதை தோண்டி எடுத்துப் பார்த்தால், அதில் 598 தங்கக் காசுகள் இருந்துள்ளன.
வேறு ஏதாவது அந்த சுவரில் இருக்கிறதா என அவர்கள் தேட, அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே, சற்று தொலைவில் அதே சுவரில் ஒரு பெட்டி மறைத்துவைக்கப்பட்டிருந்திருக்கிறது.
அந்த பெட்டியை எடுத்துப் பார்த்தால், அதற்குள் பிரேஸ்லெட்கள் முதலான சில தங்கத்தாலான பொருட்கள் இருந்துள்ளன. அவற்றின் மொத்த எடை 6.8 கிலோ ஆகும்.
அவற்றின் மதிப்பு, 341,000 டொலர்கள். இலங்கை மதிப்பில் அது 10,23,41,888.44 ரூபய் ஆகும். அந்த புதையல் அருங்காட்சியகம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்படி சுவரில் விலைமதிப்பில்லாத பொருட்களை புதைத்து வைப்பது வழக்கம்தான் என கூறியுள்ள அருங்காட்சியக அலுவலர்கள், என்றாலும், இந்த காலத்தில் இவ்வளவு பெரிய புதையல்கள் கிடைப்பது அபூர்வம் என்று கூறியுள்ளார்கள்.
புதையலைக் கண்டுபிடித்தவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கப்பட்டதா என்பது தெரியவரவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |