ஜேர்மனியில் 2,000 ஆண்டு பழமையான ரோமப் படை காலணிகள் கண்டுபிடிப்பு
ஜேர்மனியில் 2,000 ஆண்டு பழமையான ரோமப் படை காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் ஒபெர்ஸ்டிம் பகுதியில் ரோமப் படை முகாமிற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான காலணிகளில் (Roman military sandals) ஒன்று அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய கண்டுபிடிப்பு, அந்த கால ரோமப் படைவீரர்களின் வாழ்க்கைமுறையை புரிந்துகொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
காலணியின் தோல் பாகங்கள் முற்றிலும் சேதமடைந்தாலும், அடித்தளப் பகுதி மற்றும் குத்தியிருக்கும் இரும்பு ஆணிகள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டிருந்தன.
ரேடியோ எக்ஸ்-கிரே மூலம் ஆய்வு செய்ததில், இது "கலிகே" எனப்படும் ரோமப் படைவீரர்களுக்கான காலணி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த காலணிகள் ரோம வீரர்களுக்கு தரப்பட்ட அதிகாரப்பூர்வ உபகரணங்களில் ஒன்றாகும். அடியில் குத்தப்பட்ட ஆணிகள், நடக்கும் போது பிடிப்பு அளிக்கின்றன.
காலிகே காலணிகள் பல அடுக்குகளாக தோலால் செய்யப்பட்டு, இரும்பு அல்லது வெண்கல ஆணிகளால் பலப்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் காலணியை காலில் பிடிக்கவும், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
மறைந்த ரோம பேரரசர் கலிகுலா, சிறுவயதில் ரோம வீரர்களுடன் சிறிய கலிகே காலணியை அணிந்ததற்காகவே “கலிகுலா” (சின்ன காலணி) என அழைக்கப்பட்டார்.
மேலும், இந்த அகழாய்வில் பண்டிகை உருப்படிகள், உணவுப் பாகங்கள் மற்றும் வேலாண்மை உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ரோம பேரரசின் பரந்தபட்ட கலாசாரம் மற்றும் தங்களது வாழ்க்கைமுறைகளை பிரதேச மக்களும் ஏற்றுக் கொண்டதைத் தெளிவாக காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Roman sandals discovered Germany, Ancient Roman footwear caligae, 2000 year old Roman sandal find, Roman military gear archaeology, Oberstimm Roman excavation, Caligae Roman army boots, Roman Empire in Germany, Ancient Roman soldier equipment, German Roman site sandal find, Roman archaeological discoveries 2025