ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பரபரப்பை உருவாக்கிய சம்பவம்: 22,000 பேர் வெளியேற்றம்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
இரண்டு குண்டுகள்
புதன்கிழமை காலை, Spandau என்னுமிடத்தில் கட்டுமானப்பணியாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருக்கும்போது 100 கிலோ எடையுள்ள ரஷ்ய வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழும் சுமார் 12,400 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
அதேபோல, ஜேர்மனியில் ஓடும் Spree என்னும் நதியில் இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு, பெர்லினிலிலுள்ள Fischerinsel என்னுமிடத்தின் அருகில் வாழும் சுமார் 10,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
Bei Bauarbeiten wurde gestern Vormittag in #Hakenfelde eine 100kg #Weltkriegsbombe gefunden. Diese soll morgen durch unsere Spezialisten der #Kriminaltechnik entschärft werden. Hierfür wird ein Sperrbereich bis zu 500m um den Fundort errichtet. Alle Menschen im Bereich, sind… pic.twitter.com/Sx2Y8WWxmI
— Polizei Berlin (@polizeiberlin) September 18, 2025
நதியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குண்டு வெடிக்கும் அபாயம் இல்லை என தெரியவந்ததையடுத்து இன்று காலை மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்.
அந்த குண்டை நதியிலிருந்து அகற்றி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்று செயலிழக்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Spandau என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணிகள் தொடர்கின்றன.
ஜேர்மனியில் இதுபோல வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம்தான் என்றாலும், தலைநகர் பெர்லினில் இவ்வளவு அதிக அளவில் மக்கள் வெளியேற்றப்பட்டது சமீபத்திய ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பதால், பெர்லின் மக்கள் இன்று காலை வரை பரபரப்பாகவே காணப்பட்டுள்ளார்கள் என்கின்றன ஊடகங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |