ஜேர்மன் ராணுவத்துக்காக கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கி குண்டுகள் மாயம்
ஜேர்மன் ராணுவத்துக்காக ஆயிரக்கணக்கான துப்பாக்கி குண்டுகள் லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட நிலையில், அவைகள் மாயமாகியுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான துப்பாக்கி குண்டுகள் மாயம்
ஜேர்மன் ராணுவத்துக்காக கப்பலில் கொண்டுவரப்பட்ட துப்பாக்கி குண்டுகளை ராணுவ தலைமையகத்துக்கு கொண்டு சேர்க்க தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரை ராணுவம் நியமித்துள்ளது.

அந்த நிறுவன லொறி ஒன்றில் சுமார் 20,000 துப்பாக்கிக்குண்டுகள் கொண்டுவரப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் 25ஆம் திகதி, Burg என்னுமிடத்தில் லொறியை பார்க்கிங் ஒன்றில் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் அதன் சாரதி.
மறுநாள் காலை அவர் லொறியை கொண்டு ராணுவ தலைமையகத்தில் ஒப்படைக்க, லொறியிலிருந்த துப்பாக்கிக் குண்டு பார்சல்கள் மாயமாகியிருந்தது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து உடனடியாக ராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |