தோனியின் கணிப்பு தவறாகி போனது! உலகக்கோப்பை கடைசி ஓவர் குறித்து பேசிய பிரபல வீரர்
2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் கடைசி ஓவர் தொடர்பில் தோனி தவறாக கணித்துவிட்டதாக ஆர்பி சிங் கூறியுள்ளார்.
தோனி என்ற வெற்றி கேப்டன் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆளுமையாக மாறியது 2007 டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய பிறகு தான். அந்த இறுதிப்போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறக்கவே முடியாது.
அதற்கு காரணம் அப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது தான்..! போட்டியின் கடைசி 6 பந்துகளில் 13 ரன்களை எடுத்தால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுவிடும், இந்தியாவிற்கு தேவையான ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் போட்டியை இந்தியா வென்றுவிடும்.
ஆனால் போட்டியில் பவுலர்களை எதிர்கொள்ள போகிறது மிஸ்பா உல்ஹக், அவர் ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை, ஆனால் 3 பெரிய சிக்சர்களை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடித்து இந்த கோப்பையை வென்றே தீருவேன் என களத்தில் நின்று கொண்டிருந்தார்.
Twitter/icc
கோப்பையை வெல்ல 13 ரன்களை தடுத்து நிறுத்தும் ஒரு பவுலரை களமிறக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் ஜொகிந்தர் ஷர்மாவை களமிறக்கினார் கேப்டன் தோனி. போச்சு ஆட்டம் அவ்வளவுதான் என்று புலம்பிகொண்டிருக்கும் போதே ஒரு சிக்சரை கிரவுண்டிற்குள் அனுப்பி விட்டார் மிஸ்பா. 4 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவையென்ற இடத்தில் பந்தை பின்னால் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கைகளில் கொடுத்துவிட்டு மிஸ்பா அவுட்டாக, இந்தியா கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டது.
இதுகுறித்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 லீக்கில் கமண்டெரி செக்சனில் பேசியிருக்கும் ஆர்பி சிங் கூறுகையில், தோனிக்கு கடைசி ஓவரை விட 18ஆவது மற்றும் 19ஆவது ஓவர் தான் முக்கியம் என நினைத்தார்.
மிஸ்பா கடைசிவரை நிற்பார் என்று தோனி நினைக்கவில்லை. அவருடைய விக்கெட்டை கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர்களிலேயே வீழ்த்தி விடலாம் என்று நினைத்திருந்தார் தோனி. ஆனால் அவர் கணிப்பை தகர்த்து ஹர்பஜன் வீசிய 17ஆவது ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட மிஸ்பா, இறுதிவரை களத்தில் இருந்தார்.
18ஆவது, 19ஆவது ஓவரை நானும், ஸ்ரீசாந்தும் வீசினோம். 20ஆவது ஓவரை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் இருந்தது. இறுதி முடிவாக ஜொகிந்தர் ஷர்மாவை பந்து வீச அழைத்தார் என கூறியுள்ளார்.
youtube